சவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்…

(UTV|INDIA)-ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *