(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் ராஜாங்கன, தெதுறு ஓயா மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(24) காலை முதல் தெதுறு ஓயாவின் வான் கதவுகள் 08, தம்போவ வான் கதவுகள் 02 உம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.