டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…

(UTV|COLOMBO)-இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முன்னேற்றகரமான பக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலம் எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் 800 தொடக்கம் ஆயிரம் கோடி ரூபாவுக்கு இடையில் வெளிநாட்டு நாணயம் கிடைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் முதல் வருடத்தில் டொலரின் பெறுமதி 160 ஆக குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது வருடத்தில் டொலரின் பெறுமதி 140 ரூபாவாக வீழ்ச்சியடையும். நாட்டின் நிதித்துறையை வலுப்படுத்த நேரடி முதலீட்டை மாத்திரம் எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *