மோதலினால் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு

(UTV|COLOMBO)-மோதலொன்றில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பேருவளை – உமயிசரா மத்திய மகா வித்தியாலயம் இரண்டு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மாணவரின் மரணம் மற்றும் சந்தேகநபரான மாணவரின் கைது ஆகியவற்றை கருத்திற் கொண்டு பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேருவளை வலயக் கல்வி காரியலயம் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய பேருவளை – மரக்கலாவத்த பிரதேசத்தை சேர்ந்த மாணவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து , சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் , அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் நாகொடை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் , நேற்றைய தினம் மாணவர் உயிரிழந்ததாக நாகொடை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் 15 வயதுடைய மாணவர் பேருவளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *