(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஹஜ் முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
இந்த நேர்முகப்பரீட்சைக்காக 95 முகவர் நிலையங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு திணைக்களம் அறிவித்திருந்தது.
ஹஜ் முகவர் நியமனங்கள் டிசம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில் வழங்கப்படவுள்ளன.