நான் எதற்கும் பயந்தவன் அல்ல

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு எதிராக ஆங்காங்கே சென்று பல்வெறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விடயம் குறித்து நான் எழுத்து மூலம் சபாநாகருக்கு அறிவித்தேன். இந்த வகையில் அது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்துவார் என, கருதுகிறேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்:-

தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கருத்துரைத்த சரத் பொன்சேகா,

ஒவ்வொரு நாளும் அவர் கொலை செய்திடுவார் இவர் கொலை செய்திடுவார் என, பயந்து வாழ மாட்டேன். அவ்வாறு பயந்து வாழ்வது ஒரு வித நோயாகும் என குறிப்பிட்ட அவர், நாம் அரசமைப்பை மாற்றியாவது, அமெரிக்காவைப் போன்று பிரதான அதிகாரிகளை மனநோய் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான முறையொன்று தயாரிக்க வேண்டும் என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *