சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

(UTV|COLOMBO)-கல்விப்பொதுத் தராதர சாதாரண தர கணிதப்பரீட்சையில் பரிட்சார்த்திக்கு பதிலாக தோற்றிய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில – போதாகம பிரதேசத்தின் பரீட்சை மத்தியநிலையத்தில் மற்றும் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தின் பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சந்தேகநபர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மாத்தறை – திஹகொட பிரதேசத்தின் பரீட்சை மத்திய நிலையமொன்றில் நேற்று இடம்பெற்ற கணித பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக தோற்றிய அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *