பாராளுமன்ற மோதல் தொடர்பில் காவல்துறைக்கு பிறப்பிகப்பட்டுள்ள உத்தரவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த குழு இன்றைய தினம் பிரதி சாபநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற  வளாகத்தில் கூடியது.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் காவவல்துறை உயர் அதிகாரியொருவரும் அதில் கலந்து கொண்டிருந்தார்.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி சாபநாயகர் ஆனந்த குமாரசிறி, மோதல் பதிவாகியுள்ள காணொளி பதிவு, பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களுடன், வெளிநபர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *