லேக் ஹவுஸ் தாக்குதலுக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் சிலர் அமைதியற்ற முறையில் செயற்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது கண்டனத்தை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தமது கட்சி ஆதரவாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/12/UNP-1.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *