(UTV|COLOMBO)-திருகோணமலை -நொச்சிகுளம் – ஆடியாகல வன பிரதேசத்தில் புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் தெஹிஒவிட, கெசெல்வத்த மற்றும் தொடம்கொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.