அஜித்துடன் இணையும் நடிகையின் வாரிசு

(UTV|INDIA)-அஜித் நடிக்கும் 59வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். இவர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியவர். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக புதியபடம் உருவாகிறது. அமிதாப்பச்சன் நடித்த வேடத்தை அஜித் ஏற்கிறார். இதிலும் பெப்பர் சால்ட் இமேஜ் தோற்றத்துடன் அஜித் நடிக்கவிருக்கிறார்.

பாலியல் தொல்லை தரும் 3 ஆண்களை வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் 3 இளம்பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகின்றனர் என்பதே இப்படத்தின் கரு. இந்தியில் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். வழக்கறிஞராக அமிதாப் நடித்திருந்தார். அந்த வேடத்தைத்தான் அஜீத் ஏற்றிருக்கிறார். பாலியல் தொல்லை தரும்  3 வாலிபர்களில் ஒருவராக இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.  3 இளம்பெண்களில் ஒருவராக இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி நடிக்கிறார். ஏற்கனவே இவர் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் முதன்முறையாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.  மற்ற 2 நடிகைகள் தேர்வு நடக்கிறது. இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *