கங்காராம விகாரை ஆசீர்வாத பூஜையில் ஜனாதிபதி பங்கேற்ப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு பிரதான சங்க நாயக்கர் ஹுணுபிட்டிய கங்காராமாதிபதி கலாநிதி வண. கலபொட ஞானீஸ்ஸர நாயக்க தேரருக்கு நலன் வேண்டி நேற்று பிற்பகல் கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜனவரி 01 ஆம் திகதி வரை கங்காராம விகாரையில் சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் சமய கிரியைகளுடன் இணைந்ததாக நோய்வாய்ப்பட்டுள்ள வண. தேரர் விரைவில் சுகமடைய வேண்டுமென பிரார்த்தித்து இந்த ஆசீர்வாத பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஆசீர்வாத பூஜையில் கலந்துகொண்டார்.

கங்காராம விகாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் சமய நிகழ்வுகளை ஆற்றினர்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *