முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-முதலை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று பொலன்னறுவை – சோமாவதி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவின் ஊடாக ஓடும் மகாவலி கங்கையில் இருந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு வேட்டையாடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஹிங்குராங்கொடை , புத்தயாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *