(UTV|COLOMBO)-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை(08) காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறித்த கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.