சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு

(UTV|COLOMBO)-இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளமூலமான ஈ-நுழைவாயில் அனுமதிக்கான சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அஜித் பி பெரேரா ஆகியோர் தலைமையில் இன்று 11.00 மணிக்கு இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஈ-நுழைவாயில் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலகுவாக தேசிய பூங்காவை பார்ப்பதற்கான வசதி கிட்டும். முதல் முறையாக வில்பத்து தேசிய பூங்காவுக்காக இந்த பிரவேச ரிக்கெட் நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *