பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கம் எவ்வித அடிப்படையும் இல்லாமல் காபன் வரியை கொண்டு வந்துள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று(15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன;

“..புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்து வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அரசாங்கம் ஒரே விடயத்திற்காக இருமுறை வரி அறிவிட தயாராகிறது.

எரிபொருள் விலை குறைக்கப்படும் விதத்தில் எவ்வித பிரயோஜனமும் இல்லை
இரண்டு ரூபாவினால் எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது, இதனால் நாள் ஒன்றிற்கு அரசாங்கம் 200 இலட்சம் ரூபா நட்டமடைகிறது..” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *