பாடகி சுசித்ரா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!!

(UDHAYAM, KOLLYWOOD) – சித்ரா தென்னிந்திய திரையுலக பாடகி. இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

சமீபத்தில் இவரது ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு பல தமிழ் திரையுலக பிரபலங்களின் அந்தரங்கங்கள் ட்வீட்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுசித்ரா சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். இளங்கலை பட்டத்தை திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவனியோஸ் கல்லூரியில் பயின்றார்.

பிறகு இவர் எம்.பி.எ-வை கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பயின்றார். அங்கு பயிலும் போது கல்லூரியின் இசை குழுவில் கலந்துக் கொண்டு பாடல்கள் பாட துவங்கினார்.

படிப்பை முடித்து ஒரு இணையத்தளத்தில் பணிபுரிந்தார். பிறகு அங்கிருந்து ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக சேர்ந்தார். இங்கு தான் சுசித்திரா புகழ்பெற்றார்.

இவரது ஹலோ சென்னை ஷோ மிகவும் பிரபலம். இதன் மூலம் பெரும் இளைஞர் கூட்டத்தை ரசிகர்களாய் பெற்றார் சுச்சித்ரா. மேலும், இவரது ஃப்ளைட் 983 எனும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம்.

ஆர்.ஜே-வான சில வருடங்களில் இவர் பாடகியாக உருவெடுத்தார்.

இவர் நடிகை ஸ்ரேயா (கந்தசாமி), மாளாவிகா (திருட்டு பயலே), தமன்னா (கேடி), லக்ஷ்மி ராய் (மங்காத்தா) போன்ற பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

இது மட்டுமின்றி பல ஸ்டேஜ் ஷோ, ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது மின்னல் வேக பேச்சு, கேளிக்கையாக பேசும் பாணி போன்றவை பலரை ஈர்த்தது.

பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து சொந்தமாக பாடல் எழுதி, இசை அமைத்தும் வந்தார் சுசித்திரா.

பிரபல துணை நடிகர் மற்றும் ஸ்டேன்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் கார்த்திக் குமார் தான் சுசித்திராவின் கணவர்.

நன்றாக சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் இன்று ட்விட்டர் மூலமாக பெரும் புயல் வீசியுள்ளது. பிரபலங்களின் அந்த அந்தரங்க படங்கள் யாரிடம் இருந்து கசிகிறது? ஹேக் செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு எப்போது விடை கிடைக்கும் என தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *