ரயிலில் நடனம் ஆடிய நஸ்ரியா…

(UTV|INDIA)-நடிகை நஸ்ரியா அஜீத்தின் தீவிர ரசிகை என்பது அவர் விஸ்வாசம் படத்துக்காக வெளியிட்டு வந்த கவுன்ட் டவுண் மெசேஜ்கள் மூலம் தெரியவந்தது. பஹத்பாசிலை மணந்தபிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். இதற்கிடையில் உறவினர்கள், நெருக்கமானவர்கள் இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ரயிலில் பயணமான அவர் ஒரு இடத்தில் ரயில் நின்றபோது திடீரென்று கதவு அருகே வந்து நின்றுக் கொண்டு நடனம் ஆடினார்.

அவரது குறும்புத்தனமான நடனத்தை வீடியோவாக டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதேபோல் இயக்குனர் இல்ல நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றவர் திடீரென்று அங்கிருந்த நண்பர்களை கண்டதும் கையை உயர்த்தி நடனம் ஆட ஆரம்பித்தார். நஸ்ரியாவின் இந்த சேட்டைகள் சுட்டித்தனமாக இருப்பதாக பலர் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

திரையுலகினர் மத்தியில் தற்போது ‘10 வருட சேலன்ஞ்’ என்ற இணைய தள போட்டி டிரெண்டாகி வருகிறது. பல நடிகைகள் தங்களது 10 வருடத்துக்கு முந்தைய புகைப்படத்தையும், தற்போதுள்ள தோற்றத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். நஸ்ரியாவும் தனது இருவித படங்களையும் பகிர்ந்திருப்பதுடன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக தனது பள்ளி பருவ படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *