மறுபடியும் ஆபாச காட்சியில் காஜல்

(UTV|INDIA)-முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார். பாரீஸ் பாரீஸ் பெயரில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் காஜலுக்கு சக தோழி பாலியல் தொல்லை தரும் ஆபாச காட்சி இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. அக்காட்சிபற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் தனது வேலையை தொடர்ந்து கவனித்து வருகிறார் காஜல்.

ஏற்கனவே குயின் படம் தெலுங்கில் மகாலட்சுமி பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் தமன்னா கதாநாயகி யாக நடிக்கிறார். அப்படத்தின் டீஸரில் அதிர்ச்சி தரும் ஆபாச காட்சிகள் இல்லாததால் காஜல் தமிழில் நடித்துள்ள இப்படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பலரும் ஆசை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தெலுங்கில் சீதா படத்தில் நடித்து வருகிறார் காஜல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளி யிடப்பட்டது. அதைக்கண்டதும் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்த ஆபாச காட்சியில் கொடுத்த அதே எக்ஸ்பிரஷனை இந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்திலும் காஜல் தந்திருப்பதே அதிர்ச்சிக்கு காரணம். அவருடன் பட ஹீரோவும் ஜாலியான ஒரு எக்ஸ்பிரஷன் தந்திருப்பது அதிர்ச்சிக்கு உரம் போட்டிருக்கிறது. இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பதற்கு காஜலை அவரது ரசிகர்கள் நெட்டில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *