மீண்டும் கவர்ச்சி வலைவிரிக்கும் இலியானா

(UTV|COLOMBO)-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா திடீரென்று இந்தியில் நடிக்கச் சென்றார். பாலி வுட்டில் நுழைந்த வேகத்தில் வெற்றி படமும் அமைந்தது. ஆனால் அங்குள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் திணறினார். வெற்றி படம் தந்தபோதும் பட வாய்ப்புகள் குவியவில்லை. வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்தவருக்கு கைவசம் இருந்த படங்களை முடித்துக்கொடுத்த பின் புதிய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனத்தை திருப்ப முடிவு செய்தார். அதற்காக தெரிந்த நண்பர்களை தூதுவிட்டு வாய்ப்பு தேடியதுடன் தனது அரை நிர்வாண கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அதற்கு பலன் கிடைத்தது.

சுமார் 6 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு அமர் அக்பர் ஆண்டனி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பை இலியானா ஏற்றுக்கொண்டார்.  அதைப் பயன்படுத்தி ஏற்கனவே தான் விட்டுச்சென்ற இடத்தைபிடித்துவிடலாம் என்று எண்ணினார். அதற்காக மெலிந்திருந்த தனது உடற்கட்டை மீண்டும் கொழுக் மொழுக் தோற்றத்துக்கு மாற்றி கவர்ச்சியாக நடனம் ஆடினார். அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போனது. இலியானாவின் தோற்றத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டதே இதற்கு காரணம். இதனால் மனம் நொந்துபோனவர், சில மாதங்கள் வாய்ப்புக்காக காத்திருந்துவிட்டு அது கைகூடாததால் மும்பை புறப்பட்டு சென்றார். தற்போது கைவசம் படம் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் இணைய தள பக்கத்தில் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்புக்கு வலை வீசிக்கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன், சிவப்பு பிகினி நீச்சல் உடை அணிந்து இலியானா வெளியிட்டிருந்த புகைப்படம் இளசுகளுக்கு இளமை விருந்துபடைப்பதாக அமைந்திருந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *