இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம்

(UTV|COLOMBO) இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் செயல்படவுள்ளது.

இந்த நிலையம் கொழும்பு ஒருகொடவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது மாணவர் குழாமை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சந்தன விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையத்திற்காக 17 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு கொரியாவின் எக்ஸ்சிம் வங்கி உதவி செய்கிறது. நவீன வசதிகளை கொண்டதாக தொழில் பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு விரிவுரை மண்டபங்கள், கேட்போர் கூடம், தொழிற்கூடங்கள், நூலகம், மொழியாய்வு கூடம், கணனி ஆய்வு கூடம், சிற்றூண்டிச்சாலை, விடுதிகள் முதலான வசதிகள் உள்ளடங்கி உள்ளன.

இந்த தொழில்பயிற்சி நிலையத்தில் மோட்டார் வாகன தொழில்நுட்பம், குளிரூட்டி மற்றும் வாயு சீராக்கி தொழில்நுட்பம், ஓட்டு வேலை தொழில்நுட்பம், மின்சார மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம் உட்பட ஒன்பது கற்கை நெறிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தொழில் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ளன.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *