அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள ரெஜினா…

(UTV|INDIA) ஓரினசேர்க்கை சட்டப்படி தவறவில்லை என்றாலும், சமுதாயத்தில் எப்போதும் அவர்களுக்கு எதிர்ப்பு மட்டுமே வருகிறது.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரெஜினா கசன்ரா தற்போது ஓரினசேர்க்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

“எனக்கு ஓரினசேர்க்கை நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் அவர்களை புரிந்துகொண்டு, ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் பலரும் கலாச்சாரம்-ஒழுக்கம் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் பொது இடத்தில் யாராவது நெருக்கமாக இருந்தால் அல்லது கிஸ் செய்தால் அதற்கும் எதிர்ப்பு வருகிறது,” என ரெஜினா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்கிற ஹிந்தி படத்தில் நடிகை சோனம் கபூருக்கு ஓரின சேர்க்கை தோழியாக ரெஜினா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *