பாராளுமன்ற மோதல் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறு பிரதி சபாநாயகர் வேண்டுகோள்

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், தமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பில் சபாநாயகர் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு இணையாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைககளை முன்னெடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் மோதல் நிலை ஏற்பட்டது.

இந்த மோதல் தொடர்பில் 59 உறுப்பினர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த ஆவணத்தைத் தாம் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தி பிபிசி இந்த செய்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *