அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

(UTV|COLOMBO) கடற்றொழில் அனுமதி பத்திரமின்றி நேற்று(11) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் – குதிரமலை கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள படகு மற்றும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *