(UTV|COLOMBO) அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்துடன், அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஏழு பேர் அங்கம் வகிக்கிறார்கள்.ஐநாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் ஆலோசகராக வேலை செய்த விஜயானந்த ஜயவீர குழுவின் தலைவர் . இதில் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, பிரபல ஊடகவியலாளர் நாலக குணவர்த்தன, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌசல்யா பெர்னாண்டோ, அனோமா ராஜகருணா, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
இன்று சமூகத்தில் ஊடகப் பயன்பாடு, அவற்றின் சுதந்திரம் பற்றிய சமூக கருத்தாடல் தீவிரம் பெற்றுள்ளது. இந்தப் பின்புலத்தில் தனியார் ஊடகங்களை ஒழுங்குறுத்துவதற்கு முன்னர், அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பது ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாகும்.