காஷ்மீர் தாக்குதல்: கோழைத்தனமான தாக்குதல்-கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

(UTV|INDIA) காஷ்மீரில் மனிதவெடிகுண்டு நடத்திய பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என்றும், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு பலதிரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியபோது, ‘கோழைத்தனமான இந்த தாக்குதல் குறித்த செய்தி அறிந்தவுடன் நெஞ்சம் பதறியது. இந்த தாக்குதலில் மகன், சகோதரர், தந்தை மற்றும் கணவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா இதுகுறித்து கூறியபோது, ‘காஷ்மீர் தாக்குதல் குறித்த செய்தியை படிக்கும்போதே மனது கனத்தது வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் மாதவன், நடிகர் அல்லு சிரிஷ், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, நடிகர் அக்சயகுமார், நடிகை யாமி கவுதம் உள்பட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பலியான வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *