இறக்குமதியாகும் பால்மா மக்களுக்கு உகந்தது அல்ல.. – ஜனாதிபதி..

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியமானது மக்களுக்கு உகந்தது அல்லவென தெஹியத்தகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;

“.. நாட்டை முன்னேற்ற தேசிய பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். தேசிய பால் உற்பத்தி முன்னேற்றமடைந்தால் தான் தேசிய தொழிற்துறை மிருக வளங்கள் அபிவிருத்தியடையும். தான் இவ்வாறு கூறுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் தம்முடன் கோபப்படுகின்றன…

போதை வர்த்தகர்கள், மதுபாவனையானர்கள், மருந்து விற்பனையாளர்கள் யார் தன்னுடன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை பால்மா விடயத்தில் தன்னால் அமைதியாக இருக்க முடியாது..

ஆரோக்கியமான மக்களுக்கு தேசிய பாலே தேவை. நாம் பால்மா நிறவனங்களிடம் அடி பணிந்துள்ளோம். பால்மாகாரர்களால் நாட்டை தேவைக்கேற்ற மாதிரி அடிபணிய வைக்கலாம். எனினும் நாட்டு மக்களின் சுகாதாரத்தை அடி பணிய வைக்கவிடுவோமானால் அது மிகப் பெரிய தவறு.

உலக நாடுகளில் 10- 15 வரையான நாடுகளே பால்மாவை இறக்குமதி செய்கின்ற நிலையில், எமது நாடும் அதில் உள்ளடங்குகின்றமை மிகவும் துரதஷ்டமான விடயமாகும்…” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *