பொது மக்களுக்கு கண் வைத்தியர்களின் அறிவுறுத்தல்…

(UTV|COLOMBO) கண் விழி விறைப்பு நோய் – குளுக்கோமா காரணமாக கண்பார்வையுடன் தொடர்புடைய நரம்புகள் சேதமடைந்து படிப்படியாக பார்வைப் புலன் குறைகிறது.

இதனால் முழுமையான குருட்டுத் தன்மை ஏற்படலாம் குளுக்கோமா பற்றி கூடுதல் கவனம் செலுத்துமாறு கண் வைத்தியர்கள் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்…
இலங்கையில் குளுக்கோமா பற்றிய தேசிய மட்ட ஆய்வொன்றை நடத்த உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தார்கள். உலக குளுக்கோமா வாரம் பற்றி விபரிப்பதற்காக இன்று தேசிய கண் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் மருத்துவர்கள் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.

40ற்கும் 50ற்கும் இடைப்பட்ட வயதெல்லையைச் சேர்ந்தவர்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் அதிகம். எனவே கண்பரிசோதனை பிரிவுள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் குளுக்கோமா சோதனைகளை நடத்த முடியும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார். இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *