வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மேலும் குழுநிலை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிவரை 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மாலை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

மற்றும் ,குழுநிலை விவாதத்தில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் இடம்பெற்று அவற்றை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளன.

இன்றைய தினம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இத்துடன், பிரதமர் அலுவலகம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சரவை அலுவலகம், அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முதலாவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன், பாராளுமன்றம் , சபை முதல்வர், ஆளுங்கட்சி அமைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு அலுவலகம், எல்லை நிர்ணய ஆணைக்குழு உள்ளிட்ட மேலும் சில திணைக்களங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *