(UTV|COLOMBO) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.