சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

மாணவர்களாகிய உங்களின் இந்த வெற்றிக்கு நீங்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகள் மாத்திரமின்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அபரிமிதமானது கலந்துள்ளது. அந்தவகையில், மாணவர்களாகிய உங்களின் உயர்ச்சியில் பங்களிப்பு நல்கிய ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பாராட்டுகின்றேன்.

கல்விக்கான முதற்படியை தாண்டி உயர்கல்வியில் கால்வைக்கின்றீர்கள்.எனவே எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாதவர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பரீட்சை மாத்திரமே எனவே மனஞ் சோராது மீண்டும் முயற்சி செய்து பரீட்சையில் வெற்றிபேறுங்கள்.

ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *