முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

(UTV|COLOMBO) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் தொடர்பான அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அக்குறணை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவையானது 2019 மார்ச் 30ம் திகதி அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நடமாடும் சேவையில் ஆட் பதிவுத் திணைக்களம் மற்றும் முஸ்லிம் கலாச்சார திணைக்களம் என்பன பங்கேற்றன. இதன் போது கௌரவ அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களினால் அக்குறணையில் பதிவு செய்யப்பட்ட பள்ளி வாசல்களுக்கு பதிவு சான்றுகளும் மௌலவிமார்களுக்கான முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகளும் சுமார் 100 வறிய குடும்பத்தினருக்கு இலவசமாக குடிநீர் பெரும் வாய்ப்புக்கான பற்று சீட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அமைச்சரினால் அவர்களுக்கு இலவச கண்ணாடிகளும் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு இங்கு ஆட் பதிவுத் திணைக்களத்தினால் காணாமல் போன, பழுடைந்த ஆள் அடையாள அட்டைகளுக்குப் பதிளாக புதிய அடையாள அட்டைகள் வழங்கும் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் தொடர்பான அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அக்குறணை பிரதேச் செயலாளர், அக்குறணை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு றம்சான் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும்,கௌரவ அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு லிபேரா, திரு ரமீம், அமைச்சரின் ஊடக செயலாளர் றஸீ ஹஸீம் உட்பட பலரும் பங்கேற்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *