அனுமதிப்பத்திரமின்றிய பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…

(UTV|COLOMBO) அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட செயலாளர்களின் மூலம் ஆராயப்பட்டு வருதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விளிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதோடு, இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகையில், 011 2335792 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இவர்கள் தொடர்பில் அறிவிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *