(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட மாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.
அந்நிலையில், மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.