(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்காக இம்முறை 05 நாட்களை ஒதுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சிறைகைதிகளை பார்வையிட சிறைக்கைதிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படடுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் தமிழ் சிங்கள புத்தாண்டில் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிட புத்தாண்டு தினம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.