எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்…

(UTV|COLOMBO) செல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும், உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள,தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான தேசிய திருவிழாக்களில் ஒன்றாகும். அது மட்டுமின்றி உலகெங்கிலும் குடியிருக்கும் அனைத்து இலங்கை சமூக மக்களும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருவருக்கொருவர் உறவுகளை இணைத்து, பலப்படுத்துவதற்கும்,உலகெங்கும் உள்ள வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.

இச்சமயத்தில் வளமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க விழைகிறேன். ஒற்றுமையுடன் இந்த புத்தாண்டு விழாவினை கொண்டாடுவீர்கள் எனவும் அஃது ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *