வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253-சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO) கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த எண்ணிக்கை பிழையானது.

இவ்வாறான குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்படுவோரின், உடல்கள் சிதறி பல பாகங்களாக சிதைவடைவதனால், ஒரே உடலின் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு சடலங்களாக கணக்கிடப்படும் சாத்தியங்கள் உள்ளன.

இதுவரையில் உறுதி செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் படி, 253 பேரின் உயிர்கள் இந்த குண்டுத்தாக்குதல்களில் காவுகொல்லப்பட்டமை உறுதியாகி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *