பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) பழைய சிவனொளிபாத வீதியின் இதயம் மற்றும் தங்க வீதி என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ்  புனரமைப்பு நடவடிக்கைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகிறது.

அமைச்சர் கபீர் ஹாசிமின் எண்ணக் கருவுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் ஸ்ரீபாகத வீதி எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி, கனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மேற்படி இரத்தினபுரி நகரத்தில் இருந்து மல்வள ஊடாக ஸ்ரீபாகம என்ற வீதி அமைந்துள்ளது. சிவனொளிபாத புனித யாத்திரை காலப்பகுதியில் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *