(UTV|COLOMBO) 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றினை வைத்திருந்த நபரொருவர் பண்டாரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 22 வயதுடைய சந்தேகநபர் அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.