(VIDEO) கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொதுமக்கள் பிரிவும் ,பதுள்ளவத்த பொலிஸ் மக்கள் சேவைப் பிரிவு மற்றும் பதுள்ளவத்த சர்வமத மக்களும் இணைந்து அன்னதான நிகழ்வு 

(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம் பெற்ற தீவிரவாத குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆசி வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்து இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பௌத்த சமயம் சார்பாக சுமேதாராமய விஹாரையின் விஹாராதிபதி மைத்திரி மூரத்தி, கிரேண்ட்பாஸ் சென்-ஜோசப் கத்தோலிக்க ஆலயத்தின் அருட்தந்தை மனோஜ், பதுள்ளவத்த பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் சிவனேசன் குருக்கள், பதுள்ளவத்த மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலின் தலைவர் மொஹமட் முஹைடீன் ஆகிய சமயத் தலைவர்களும். கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த ஏக்கநாயக்கஇ பிரஜா பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சமரவிக்கரம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அனைவரும் நாட்டில் கடந்த எப்ரல் 21ஆம் திகதி ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகள் இனியும் எற்படக் கூடாது எனவும், நாட்டில் சகல இன மக்களும் கடந்த காலங்களைப்போன்று ஒற்றுமையாகவும், சமாதானமாகவும்,அச்சமின்றியும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் எனவும் இறைவனைப் பிரார்த்தித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *