கேளிக்கை

இன்று பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அஜீத், 14 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா??

(UDHAYAM, KOLLYWOOD) – 1993ம் ஆண்டு எடுத்த அஜீத் புகைப்படத்தை தற்போது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் நடிகர் சுரேஷ் மேனன். புதிய முகம், பாச மலர்கள் ஆகிய படங்களை இயக்கியவர் சுரேஷ் மேனன்.

நடிகை ரேவதியின் முன்னாள் கணவர். தற்போது அவர் 4ஜி மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை நான் பலமுறை வெளியிட்டுள்ளேன். ஆனால் அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படத்தை மீண்டும் பார்ப்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன் என சுரேஷ் மேனன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

பாச மலர்கள் படப்பிடிப்பின்போது எடுத்தது. சின்ன ஒரு நிமிட கதாபாத்திரம். பெரிய நடிகராகியும் தற்போதும் அதே போன்று சார்மிங்காக, நட்பாக உள்ளார் என அஜீத் பற்றி ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார் சுரேஷ் மேனன்.

இன்று அஜீத்தின் சம்பளம் ரூ. 25 கோடி. ஒரு நிமிட கதாபாத்திரத்திற்காக அவருக்கு ரூ.2, 500 கொடுத்தோம் என நினைக்கிறேன் என்று சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் தீபன் மரணம் அடைந்தபோது சுரேஷ் மேனன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த அவர்,நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top