(UTV|COLOMBO) சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளதுடன் இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து வெளியிடும்போது மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் கூறியுள்ளார்.