பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாட அரசாங்கம் முழுமையான அனுசரணை

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு அரசாங்கம் முழுமையான அனுசரணை வழங்குமென தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு பொசொன் நோன்மதி வைபவம் இடம்பெறும். இதற்கு அப்பால் மாகாண மட்டத்திலும் பொசொன் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன உரையாற்றுகையில் சகல மாவட்ட, பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு நேர பிரித் பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டதுடன் சகல அரச நிறுவனங்களையும் பொசொன் நோன்மதி வாரத்தில் அலங்கரிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *