ஆறாம் கட்ட கலந்துரையாடல் ஒத்திவைப்பு (UPDATE)

(UTV|COLOMBO) புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கும் பொது ஜன பெரமுண அணியினருக்குமிடையில் இடம்பெறவிருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முற்பகல் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கிடையேயான 6 ஆம் கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

 

எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *