ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

 

(UTV|COLOMBO)- நீதிமன்றை அவமதித்தமைதொடர்பில் சிறை தண்டனை அனுபவித்துவந்த கலகொட அத்தே ஞானசார தேரர் விடுவித்தமை தனது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக கூறி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

அதன்படி மனுவை செப்டம்பர் 10ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *