(UTV|COLOMBO)- குருணாகல் போதான வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறிழைத்தமைக்கான தகவல் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைகேடான சொத்து குவிப்பு குற்றச்சாட்டுத் தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. சந்தேகத்திற்கிடமான சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள தாய்மார்களிடம் தனித்தனியாக வாக்கு மூலம் பெற்று முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.