பயணத்தை ஆரம்பித்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை (video)

கடலில் மிதக்கும் “ஒரு ட்ரில்லியன் டன்” எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஜனவரி 2018ல் இருந்து ஜூலை 2019 வரை A68 பனிப்பாறை எப்படி பயணித்தது என்பதை விளக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

அண்டார்டிகா பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் A68 என்று அழைக்கப்படும் பனிப்பாறை உடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இந்த பனிப்பாறை வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

தற்போது நகர ஆரம்பித்துள்ள 160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது.

அதிக வேகத்தில் இப்பனிப்பாறை பயணிப்பதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *