வறுமையால் தொற்று நோய்கள் பரவுகிறது – ஜனாதிபதி

 

(UTVNEWS | COLOMBO) – நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. அதனால் மக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர். இன்னும் 5 மாதங்களில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைக்கும். அதில் ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உண்யைமான அரசியல்வாதி என்பவர் மக்களின் பிரச்சினையை இனம் கண்டு அவற்றை நிவர்த்திக்க வேண்டும். உலக நாடுகளை போன்று ஏன் இலங்கையை மாற்ற முடியாது என சிலர் கேட்கின்றனர். அவ்வாறு செய்ய முடியும்.

அதற்கு ஊழல் தடையாக உள்ளது அரச சேவையே அபிவிருத்தியின் பாரிய சக்தியாகும். நாட்டின் சனத்தொகையில் 8 பேருக்கு ஒரு அரச சேவையாளர் இருகிறார்.

ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை செய்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாட்டின் வறுமையின் காரணமாகவே பல தொற்று நோய்கள் பரவுகின்றன.

இலங்கையில் 15,000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையோர் சிறைச்சாலைகளில் உள்ளனர். அதேபோல் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை புனர்வாழ்வுக்குட்படுத்த 11 புனர்வாழ்வு மையங்கள் உள்ளன. தற்போது அவை நிரம்பி வலின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *