ரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றம் – ரயில்வே திணைக்களம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மருதானை – மாத்தறை வரை செல்லும் 8058 என்ற இலக்கத்தை கொண்ட றுகுனு குமாரி கடுகதி ரயில், ஹபராதுவ ரயில் நிலையத்தல் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மருதானை ரயில் நிலையத்தலிருந்து காலை 6.05 மணிக்கு மாத்தறை வரையில் செல்லும் 8060 என்ற இலக்கத்தை கொண்ட கடுகதி ரயிலும் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து காலை 4.25 மணிக்கு மருதாணையை நோக்கி வரும் இலக்கம் 8061 என்ற கடுகதி ரயிலும் ஹபராதுவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட மாட்டாது என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வார இறுதியில் சனி மற்றும் ஞயிறு தினங்களில் மருதானை ரயில் நிலையத்திலிருந்து காலை 6.05 க்கு மாத்தறை வரை செல்லும் 8060 இலக்க கடுகதி ரயில் அஹங்கம ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *