(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – வெல்லவீதி பகுதியில் லொறி ஒன்று 07 முச்சக்கர வண்டிகளுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.